உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
செவ்வாய், பிப்ரவரி 15, 2011

நெல்லிக்குப்பம் பகுதியில் சுற்றித் திரிந்த சிறுவன் காப்பகத்தில் சேர்ப்பு கடலூர்: 

           நெல்லிக்குப்பம் பகுதியில் சுற்றித் திரிந்த சிறுவனை, இந்திய குழந்தைகள் நலச் சங்கத்தினர், விழுப்புரம் குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தனர்.

           
             கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்று மதியம் சுற்றித் திரிந்த 12 வயது சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தனது பெயர் தமிழ்மணி, புதுச்சேரி வீரமாமுனிவர் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிப்பதாகவும், கிருஷ்ணா நகரில் தந்தை மாணிக்கம், தாய் கவிதா, சகோதரி கீர்த்தனா, சகோதரர் குணா இருப்பதாகவும் தெரிவித்தான். சிறுவன் கொடுத்த தகவலின்படி, போலீசார் விசாரணை நடத்தியதில், அப்படி யாரும் இல்லை என தெரிந்தது. 

            இதைத்தொடர்ந்து, போலீசார் அச்சிறுவனை கடலூரில் உள்ள, இந்திய குழந்தைகள் நல சங்கத்தினரிடம் ஒப்படைந்தனர். சங்க உறுப்பினர்கள் திலக்ராஜ், ஆனந்தராஜ் ஆகியோர் சிறுவனுக்கு புதிய உடை வழங்கி, கடலூர் அரசு மருத்துவமனையில் வயதிற்கான சான்றிதழ் பெற்று, விழுப்புரத்தில் உள்ள குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தனர். முழுமையான விசாரணைக்குப் பின், சிறுவனை உரியவர்களிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior