உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
புதன், மார்ச் 02, 2011

தொடங்கியது +2 தேர்வு! 7 லட்சத்து 80 ஆயிரத்து 631 பேர் எழுதுகிறார்கள்!

            தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ந் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பிளஸ் 2 தேர்வு இன்று தமிழ் முதல் தாளுடன் தொடங்கியது.

           பிளஸ் 2 தேர்வை 7 லட்சத்து 80 ஆயிரத்து 631 பேர் எழுதுகிறார்கள். அவர்களில் 5477 பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 23 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள். அவர்களில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 443 பேர் மாணவர்கள். 3 லட்சத்து 87 ஆயிரத்து 102 பேர் மாணவிகள்.  சென்னை மாநகரில் 445 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 49 ஆயிரத்து 8 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகிறார்கள்.

             புதுச்சேரியில் 31 தேர்வு மையங்களில் 95 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 517 பேர் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களில் 5 ஆயிரத்து 212 பேர் மாணவிகள். 6 ஆயிரத்து 305 பேர் மாணவர்கள். மொத்தத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுக்காக 1,890 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூட மாணவர்களை தவிர தனித்தேர்வர்களாக 57 ஆயிரத்து 86 பேர் எழுதுகிறார்கள்.

            தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1 15 மணிக்கு முடிகிறது. இதில் கேள்விகளை வாசிக்க வழக்கம்போல 15 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. டிஸ்லெக்சியா, பார்வையற்றவர்கள், காதுகேளாதவர்கள், வாய் பேசாதவர்கள் மற்றும் இதர உடல் ஊனமுற்றோர்கள் சொல்வதை தேர்வில் எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

            தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடம் 5 லட்சத்து 15 ஆயிரத்து 281 பேர் பயன் அடைந்துள்ளனர். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior