உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 02, 2011

பள்ளி பருவத்தில் போதை கடலூர் மாவட்டத்தில் மாணவர்கள் பாதிப்பு

பண்ருட்டி : 

               தண்ணீர் இல்லாத காலி பாக்கெட்டில், "சொல்யூஷன்' ஊற்றி, சிறுவர்கள் போதையில் திளைக்கும் பழக்கத்தைத் தடுக்க, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

             சைக்கிள், "டியூப்' ஒட்ட பயன்படும் ஆல்கஹால் உள்ள, சொல்யூஷன் பேஸ்ட், பெவிகால், பைப்புகள் ஒட்ட பயன்படுத்தும் சொல்யூஷன், ஒயிட்னர் போன்றவற்றை, போதை பொருட்களாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி, புதுப்பேட்டை பகுதியில் பள்ளிக்கு வரும் சிறுவர்கள், 200 மி.லி., காலி தண்ணீர் பாக்கெட்டுகளில், சொல்யூஷன் ஊற்றி, அதைக் கசக்கி நுகரும் போது, நல்ல போதை தலைக்கேறுவதாக கூறுகின்றனர். 

           பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் செல்லும் பல மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் ரயில்வே ரோடு, மரங்கள் உள்ள பகுதியில், தண்ணீர் இல்லாத பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில், சொல்யூஷன் ஊற்றி போதை ஏற்றுகின்றனர். இது குறித்து பண்ருட்டி, புதுப்பேட்டை போலீசாருக்கும், வியாபார பிரமுகர்களுக்கும் தெரிந்தும், இதைத் தடுக்க முயற்சி மேற்கொள்ளவில்லை. எதிர்கால இந்தியாவை உருவாக்க வேண்டிய சிறு வர்கள், தவறான பாதைக்கு செல்வதை தவிர்க்க போலீசார், வியாபாரிகள் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior