கடலூர்:
அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில், கடலூர் மாவட்டத்தில் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் அருண்மொழித்தேவன், செல்வி ராமஜெயம் ஆகிய இருவருக்கும், தொகுதி ஒதுக்கப்படவில்லை.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னார்கோயில், விருத்தாசலம், திட்டக்குடி, ஆகிய 9 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் புவனகிரி தொகுதியில் போட்டியிட்டு செல்வி ராமஜெயம், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு அருண்மொழித்தேவன் ஆகியோர் வெற்றி பெற்றனர். அருண்மொழித்தேவன் கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் பதவி வகிக்கிறார் ஆனால் இத் தேர்தலில் செல்வி ராமஜெயம், அருண்மொழித்தேவன் ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என்று தெரிகிறது.
புதன்கிழமை அ.தி.மு.க. வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இந்த இருவர் பெயரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் கடலூர் தொகுதிக்கும், அனைத்து இந்திய எம்.ஜி.ஆர். மன்றத் துணைத் தலைவர் சொரத்தூர் ராஜேந்திரன், குறிஞ்சிப்பாடி தொகுதியிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 2 தொகுதிகளில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக