உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வியாழன், மார்ச் 17, 2011

குழந்தைகள் வயிற்றுப்போக்கு: தடுப்பூசி அறிமுகம்

சென்னை:

              ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை தடுப்பதற்கான தடுப்பூசி சென்னையில் புதன்கிழமை (மார்ச் 16) அறிமுகப்படுத்தப்பட்டது. எம்.எஸ்.டி என்ற தனியார் நிறுவனம் இந்த தடுப்பூசியை அறிமுகப்பட்டுத்தியுள்ளது

.இது குறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.ஜி.அனந்தகிருஷ்ணன், குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ். பாலசுப்பிரமணியன், நிறுவனத்தின் தடுப்பூசி மற்றும் பெண்கள் நலப் பிரிவின் தலைவர் மோனிகா செüத்ரி ஆகியோர் சென்னையில் ம் கூறியது:

               வயிற்றுப்போக்கால் ஏற்படும் காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட நோய்களால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குழந்தைகள் இறப்பு அதிகமாக ஏற்படுகின்றன. பிறந்த குழந்தைகளை தாக்கும் ஒரு வகை வைரஸ்களால் இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.உலகம் முழுவதும் ஓராண்டுக்கு ஐந்து வயதுக்குட்பட்ட 6 லட்சத்து 10 ஆயிரம் குழந்தைகள் வைரஸ் தாக்குதலுக்கு உட்பட்டு இறக்கின்றனர்.  இந்தியாவைப் பொருத்தவரை, ஓராண்டுக்கு ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 270 குழந்தைகள் இறக்கின்றனர்.

              உலகம் முழுவதும் இது போன்று நடைபெறும் இறப்புகளில் 23 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகின்றன.சுகாதாரத்தை கடைப்பிடிப்பதன் மூலம் மட்டும் இந்த வகை நோய்கள் தாக்குவதை தடுக்க முடியாது. அதற்கு தடுப்பூசி போட வேண்டியதும் அவசியம்.இதனால் எம்.எஸ்.டி. நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி குழந்தை பிறந்த 12 வாரம் 6 நாள்களில் போட வேண்டும். அடுத்த இரண்டு தவணைகளை 4 வார இடைவெளியில் போட வேண்டும்.இந்தத் தடுப்பூசிக்கு உரிமம் பெறுவதற்கு முன்னரே சுமார் 71 ஆயிரம் குழந்தைகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

                 இந்த தடுப்பூசி இப்போது பயன்பாட்டு வந்துள்ளது.இதுவரை 100 நாடுகளில் இந்த தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 62 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 4.4 கோடி தடுப்பூசிகள் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior