திட்டக்குடி:
காங்கிரஸ் மேலிடம் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன் என்று செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. கூறினார். கடந்த சட்டசபை தேர்தலில் மங்களூர் தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் செல்வ பெருந்தகை போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார்.
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கட்சியை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். தொகுதி சீரமைப்பில் மங்களுர் தொகுதி தற்போது திட்டக்குடி தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் திட்டக்குடி தொகுதி விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கும் செல்வ பெருந்தகை எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக எம்.எல்.ஏ.செல்வப்பெருந்தகை கூறியது:-
காங்கிரஸ் கட்சி மேலிடம் கட்டளையிடும் தொகுதியில் போட்டியிடுவேன். தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி 74 வது வயதிலும் 24 மணி நேரமும் உழைத்து மக்களின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எனவே அவரை எதிர்த்து எந்த அரசியல் கட்சியும் பிரசாரம் செய்யமுடியாத நிலைதான் உள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய பல கட்சிகள் இருப்பதால் தி.மு.க. அணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற முடியும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் சோனியாகாந்தி பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்.
சாதாரண ஏழை மாணவர் உயர்கல்வி படிப்பதற்காக எளிதாக வங்கி கடன் பெற வழிவகை செய்தார். மத்திய மந்திரி சிதம்பரம் மேலும் 70 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகள் கடனை ரத்து செய்தார். இவ்வாறு அவர் கூறினார்.
சாதாரண ஏழை மாணவர் உயர்கல்வி படிப்பதற்காக எளிதாக வங்கி கடன் பெற வழிவகை செய்தார். மத்திய மந்திரி சிதம்பரம் மேலும் 70 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகள் கடனை ரத்து செய்தார். இவ்வாறு அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக