உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 17, 2011

அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் திறமையை ஊக்கப்படுத்த 326 பேருக்கு காசோலை

சிதம்பரம் : 

            அண்ணாமலைப் பல்கலை மாணவ, மாணவிகள் திறமையை ஊக்கப்படுத்த 326 பேருக்கு அறக்கட்டளை சார்பில் சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கப்பட்டது.

            தமிழக அரசால் வள்ளலார் மற்றும் ராமசாமி படையாச்சியார் பெயரில் தலா 25 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாகக் கொண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அறக்கட்டளை துவங்கப்பட்டது. இதன் வாயிலாக திறமை மிக்க மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடந்த விழாவிற்கு துணைவேந்தர் ராமநாதன் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு காசோலை வழங்கினார். 

                எஸ்.சி., - எஸ்.டி., தனிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி வரவேற்றார். கலைப்புல முதல்வர் டாக்டர் செல்வராஜி, மொழிப்புல முதல்வர் முத்து, வேளாண் புல முதல்வர் வசந்தகுமார், அறிவியல் புல முதல்வர் கண்ணப்பன் ஆகியோர் பேசினர். விழாவில் ராமசாமி படையாச்சியார் அறக்கட்டளை சார்பில் 130 மாணவ, மாணவிகளுக்கும், திருப்பனந்தாள் காசி மடம் சார்பில் 63 முதுகலை தமிழ்த்துறை மாணவ, மாணவிகளுக்கும் காசோலை மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior