தமிழக சட்டமன்றத் தேர்தலில், இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இந்தாண்டு ஜன., 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர்கள் சேர்க்கை விண்ணப்பம் பெறப்பட்டது.
இவை வேட்பு மனு தாக்கல் செய்யும் வரை பெறப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. நேற்று வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதே போல், அடையாள அட்டை திருத்தம், மாற்றம் ஆகிய விண்ணப்பங்கள் பெறுவதும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் மீதான விசாரணை நடத்தப்பட்டு, மார்ச் 30க்குள் பணிகளை முடிக்க மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் பட்டியல் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படுகிறது. இவர்களுக்கான அடையாள அட்டையும் அப்போது வழங்கப்பட உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக