உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 12, 2011

கடலூர் மாவட்டத்தில் 4,801 பேனர்கள் அகற்றம்: மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன்


பெ.சீதாராமன்
கடலூர்:
 
      தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, கடலூர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
 
கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
 
             தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூடத்தில் ஆட்சியர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. 
 
கூட்டம் முடிந்ததும் ஆட்சியர் கூறியது: 
 
                கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் 11 ஆயிரம் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்று வருகிறது. 
 
             எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 3 ஆயிரம் பேர், தேர்தல் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, 9,954 நபர்களுக்கான பட்டியல் இறுதி செய்யப்பட்டு உள்ளது.9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,945 வாக்குச் சாவடிகளுக்கான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த காமே என்பவர் கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் செலவினப் பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
 
              மற்ற தேர்தல் பார்வையாளர்கள் விரைவில் நியமிக்கப்பட்டு, 17-3-2011 அன்று பொறுப்பு ஏற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தல் நடத்தை விதிமுறைகள், முழுமையாக செயல்படுத்துவது குறித்து, விடியோ பார்வைக் குழு, கணக்குக் குழு, விடியோ கூர்ந்தாய்வுக் குழு, பறக்கும் படை, ஊடகச் சான்று மற்றும் மேற்பார்வைக் குழு ஆகிய குழுக்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டு இருந்த 4,801 விளம்பர பேனர்கள், சுவர் விளம்பரங்கள் ஆகியன இதுவரை அகற்றபட்டு உள்ளன. 
 
                மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அனைத்து நிதிஉதவிகளும் நிறுத்தப்பட்டு விட்டன. தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் இயங்கும் மகளிர் சுயழுதவிக் குழுக்களுக்கும் எவ்வித நிதி உதவியும் வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஊரக வளர்ச்சித் துறை மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளிலும் எவ்வித புதிய பணிகளும் தொடங்கக் கூடாது என்றும், தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் தொடங்கிய பணிகளை மட்டுமே செயல்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
                 கிராமங்களில் உள்ள நூலகக் கட்டடங்கள், ஊராட்சி மன்றக் கட்டங்கள் மற்றும் ஏனையக் கட்டடங்களில் விளம்பரம் செய்யக்கூடாது.அரசு அலுவலகக் கட்டடங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் தொடங்கப்பட்ட பணிகளை மட்டுமே தொடர வேண்டும்.புதிதாக எந்தப் பணிகளும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட தொகையை வேலைக்கு ஏற்றார்போல் வழங்க வேண்டும்.
 
                கூடுதலாக தொகை வழங்கக் கூடாது என்று, ஊராட்சி மன்றத் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.புதிய ஒப்பந்தப் புள்ளிகள் மற்றும் ஏலங்கள் கோரக் கூடாது. ஏற்கெனவே ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு இருந்தால், அவற்றை ஆய்வு செய்து வைக்க வேண்டுமே தவிர, பணி ஆணைகள் வழங்கக் கூடாது.தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior