உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 12, 2011

கடலூர் வழியாக கோடை கால சிறப்பு ரயில்கள்:தென்னக ரயில்வே அறிவிப்பு

கடலூர் : 

             கடலூர் வழியாக ஏப்ரல் மாதத்தில் முதல் 6 கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. 

            பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து தொடங்குவதால் வெளியூர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் 6 கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஏப்ரல் 6, 13, 20, 27 மே 4, 11, 18, 25 ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் திருச்சியிலிருந்து கடலூர் வழியாக சென்னை எழும்பூர் வரை வாரம் ஒருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் இரவு 11.53 வந்தடைந்து 11.55 புறப்படும்.
 

              சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் ஏப்ரல் 7, 14, 21, 28 மே 5, 12, 19, 26 ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய நாட்களில் இயக்கப்படும். திருப்பாதிரிப்புலியூரில் இரவு 1.58 மணிக்கு வந்தடைந்து 2.00 மணிக்கு புறப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து கடலூர் வழியாக சென்னை சென்ட்ரல் வரை வாரம் ஒருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் ஏப்ரல் 11, 18, 25 மே 2, 9, 16, 23, 30 ஜூன் 6, 13, 20, 27 ஆகிய நாட்களில் இயக்கப்படும். 

               இந்த ரயில் திருப்பாதிரிப்புலியூரில் இரவு 9.58 வந்தடைந்து 10 மணிக்கு புறப்படும். சென்னை சென்டரில் இருந்து கடலூர் வழியாக இராமேஸ்வரம் வரை வாரம் ஒருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் ஏப்ரல் 12, 19, 26 மே 3, 10, 17, 24, 31 ஜூன் 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் இயக்கப்படும் இந்த ரயில் காலை 7.48 திருப்பாதிருப்புலியூர் ரயில் நிலையம் வந்தடைந்து 7.50 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூரில் இருந்து கடலூர் வழியாக திருச்செந்தூர் வரை வாரம் ஒருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் ஏப்ரல் 4, 11, 18 ,25 மே 2, 9, 16, 23, 30 ஜூன் 6, 13, 20 ஆகிய நாட்களில் இயக்கப்படும். 

                திருச்செந்தூரில் இருந்து கடலூர் வழியாக சென்னை எழும்பூர் வரை வாரம் ஒருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் ஏப்ரல் 5, 12, 19, 26 மே 3, 10, 17, 24, 31 ஜூன் 7, 14, 21 ஆகிய நாட்களில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior