உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 12, 2011

நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குள் வராத நெய்வேலி ஊராட்சி

நெய்வேலி:

                நெய்வேலி ஊராட்சி நெய்வேலித் தொகுதிக்குள் இல்லாமல் புவனகிரி தொகுதியில் இடம் பெறுகிறது.

              கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை நெய்வேலி நகரம் குறிஞ்சிப்பாடி தொகுதியிலும், நெய்வேலி ஊராட்சி விருத்தாசலம் தொகுதியிலும் இருந்து வந்தது. தற்போது தொகுதி மறுசீரமைப்பின் குறிஞ்சிப்பாடித் தொகுதியிலிருந்த நெய்வேலி நகரம், நெய்வேலியைத் தலைமையாகக் கொண்டும், பெரும்பாலான பண்ருட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களை உள்ளடக்கி நெய்வேலித் தொகுதியாக உருவெடுத்துள்ளது.

              இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பின்கீழ் விருத்தாசலம் தொகுதியிலிருந்த கம்மாபுரம் ஒன்றியங்களைச் சேர்ந்த பெரும்பாலான கிராமங்கள் புவனகிரி தொகுதிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கம்மாபுரம் ஒன்றியத்திலிருந்த நெய்வேலி ஊராட்சியும் புவனகிரி தொகுதியில் இடம்பெற்றுள்ளது .புதியதாக உருவான நெய்வேலித் தொகுதியில் நெய்வேலி ஊராட்சியும் இடம்பெறும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் புவனகிரிக்கு சற்றும் தொடர்பில்லாத வகையில் நெய்வேலி ஊராட்சி புவனகிரி தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

              தொகுதி மறுசீரமைப்பின்கீழ் கடலூர் மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையில் வாக்காளர்களைக் கொண்ட தொகுதி புவனகிரியாகும். புவனகிரி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 5 ஆயிரத்து 264 பேர் ஆகும். இதில் ஆண் வாக்களார்கள் 1 லட்சத்து 4 ஆயிரத்து 753 பேர். பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 511 பேர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior