கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப் படி சட்டமன்ற தேர்தலையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்டத்தில் இணைந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் சுய உதவிக்குழுக்கள் மற்றும் நேரடியாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சுய உதவிக்குழுக்கள் எதுவாக இருந்தாலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்திய தேர்தல் ஆணை யத்தின் நடத்தை விதிகளுக்கு முரணாக செயல்படக் கூடாது.
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வேட்பாளர்களிடமிருந்து கையூட்டு பெறுவது, இலவச பொருட்கள் பெறுவது, விருந்து உபசார நிகழ்ச்சிகள் ஆகிய செயல்களில் ஈடுபடக் கூடாது. புதிய திட்டங்களோ, கடன் உதவிகளோ மகளிர் திட்டக்குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு அனுமதிக்கப்படக்கூடாது.
மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு எந்த ஒரு அரசியல் கட்சியோ அலலது வேட்பாளரோ நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. சட்டமன்ற தேர்தலில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கட்டிடங்கள், கூட்டமைப்புகளின் கட்டிடங்கள் மற்றும் இதர அரசு கட்டிடங்களை எந்தஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ பயன்படுத்தக்கூடாது. எந்த சமுதாயம் தொடர்பான பயிற்சிகளும் அரசு கட்டிடங்கள் மற்றும் ஊராட்சி அலுவலக கட்டிடங்களில் நடத்தக் கூடாது. மகளிர் சுய உதவிக் குழுக்களை வகைப்படுத்துதல் மற்றும் தர மதிப்பீடு செய்தல் ஆகியவைகள் தேர்தல் முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மற்றும் கூட்டமைப்புகளுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான பயிற்சிகள் மற்றும் பட்டறிவு பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே சட்டமன்ற தேர்தலில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, கடலூர் மாவட்டத்தில் உரிமம் பெற்றுள்ள துப்பாக்கிகளை உடனடியாக ஒப்படைக்குமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இதுவரை 192 துப்பாக்கிகள் மட்டுமே காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனவே தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி உரிமம் பெற்றுள்ள அனைத்து துப்பாக்கிகளையும் 9-3-2011 மாலைக்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு துப்பாக்கிகளை ஒப்படைக்க தவறும் நபர்களின் துப்பாக்கிகள் 10-ந்தேதி பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக