தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை  தேர்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிடுகிறது.
                சட்டப் பேரவைத் தேர்தலில்  போட்டியிட 4 ஆயிரத்து 228 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.  அவற்றில் ஆயிரத்து 153 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை வாபஸ்  பெற புதன்கிழமை கடைசி நாளாகும். சென்னை மாவட்டத்தில் சுயேச்சையாக  மனுக்களைத் தாக்கல் செய்திருந்த மூன்று பேர் தங்களது மனுக்களை  செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றனர்.
                இதேபோன்று, கோவை உள்ளிட்ட சில  மாவட்டங்களிலும் மூன்று முதல் ஐந்து பேர் வரை தங்களது வேட்புமனுக்களை வாபஸ்  பெற்றனர். பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்கள் யாரும் மனுக்களை வாபஸ்  பெறவில்லை. 
இன்று கடைசி: 
                வேட்புமனுக்களை வாபஸ் பெற புதன்கிழமை கடைசி  நாளாகும். கடைசி நாளில் பிரதான கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை  எதிர்த்து, அதே கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போட்டி வேட்பாளர்களாக மனு தாக்கல்  செய்துள்ளனர். அவர்கள் தங்களது மனுக்களை புதன்கிழமை வாபஸ் பெறுவர் என  எதிர்பார்க்கப்படுகிறது. மனுக்கள் வாபஸ் முடிவுற்ற பிறகு புதன்கிழமை  மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.  இதையடுத்து, தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கக் கூடும் என  எதிர்பார்க்கப்படுகிறது. 
                வாக்குப்பதிவு ஏப்ரல் 13-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்படுகின்றன.


 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக