உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
புதன், மார்ச் 30, 2011

முந்திரி பழத்தில் பொருட்கள் தயாரித்தல் விருத்தாசலத்தில் இலவச பயிற்சி முகாம்

விருத்தாசலம் : 

           விருத்தாசலத்தில் முந்திரி பழத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பயிற்சி நடைபெற உள்ளது. 

இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

                விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் முந்திரி பழத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ணை மகளிர் சுயஉதவி குழுக்கள், சுயதொழில் செய்ய ஆர்வமுள்ள பெண்கள், தொழில் முனைவோர் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ள பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு மற்றும் பயிற்சி கையேடு இலவசமாக வழங்கப்படும். 

           பயிற்சிக்கு முதலில் வரும் நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவதால் பயிற்சியில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் முன்கூட்டியே தங்களது பெயரினை வரும் மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் விருத்தாசலம் வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நேரிடையாக வந்து தங்களது பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior