
சிதம்பரம்:
             தனது ஆட்சி காலத்தில் சுனாமி நிதியை கூட ஜெயலலிதா  ஒழுங்காக பயன்படுத்தவில்லை.   ஆனால் கருணாநிதி ஆட்சியில், கடலூர் மாவட்டத்தில் ரூ.600 கோடி நிதி  ஒதுக்கப்பட்டு வெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மாநிலங்களவை  உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். 
 காட்டுமன்னார்கோவிலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள்  கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை கனிமொழி எம்.பி.  பிரசாரம் செய்து பேசியது: 
               துரை.ரவிக்குமார் நமது கூட்டணி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். சட்டசபையில்  தொகுதி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கூறி பதிவு செய்துள்ளார்.  இவர் முயற்சியில் கடலூர், நாகை மாவட்டங்களை இணைக்கும் வகையில் கொள்ளிடம்  ஆற்றில் முட்டம்-மணல்மேடு இடையே பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. வீராணம்ஏரி  தூர்வாரப்பட்டு அந்த மண்ணை கொண்டு கொள்ளிடக்கரையை பலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. 
                 இதனால் ஏரியின் கொள்ளளவு உயர்த்தப்பட்டு அதிகளவு நீர் தேக்கலாம். ரூ.115 கோடி  செலவில் கொள்ளிடக்கரையை அகலப்படுத்தி, பலப்படுத்தி கரையை உயர்த்தும் பணி நடைபெற்று  வருகிறது. எனவே துரை.ரவிக்குமாருக்கு மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களித்து வெற்றி  பெறச் செய்ய வேண்டும் என்றார்.  காட்டுமன்னார்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்   துரை.ரவிக்குமாரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி.


 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக