உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 09, 2011

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள்

கடலூர்:

            தேர்தல் விதிமுறை குறித்த புகார்களை தெரிவிக்க கட்டணமில்லாத தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

              சட்டசபை தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்தி முடிக்கும் பொருட்டு தேர்தல் ஆணைய அறிவுரையின்படி மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை கடந்த 1ம் தேதி செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறை தேர்தல் முடியும் வரை 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சுழற்சி முறையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
                  பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் விதி மீறல் தொடர்பான புகார்களை 1800 425 7019, 1800 425 1965 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலோ அல்லது 04142-230651, 04142-220029 ஆகிய தொலைபேசிகளில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்களை பதிவேட்டில் பதிவு செய்து, தகுதி அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

                தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களின் பேரில் நடவடிக்கை எடுப்பதற்காக ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு தாசில்தார், இரண்டு போலீசார் கொண்ட செலவின மேற்பார்வை பறக்கும் படை மற்றும் ஒரு துணை தாசில்தார் தலைமையில் மூன்று போலீசார் கொண்டு சோதனைச்சாவடி குழுவும், இவைத் தவிர ஒவ்வொரு தொகுதிக்கும் தனியாக தேர்தல் நன்னடத்தை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 
     
               அதில் தேர்தல் நன்னடத்தை கண்காணிப்பு குழுவினர் தொகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை மேற்கொள்வார்கள். எனவே பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பாகவும், தேர்தல் குறித்த தகவலை மேற்கண்ட தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior