உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 09, 2011

குறிஞ்சிப்பாடி கோட்டத்தில் ஏப்ரல் முதல் மின் கட்டணம் வசூல் முறையில் மாற்றம்

குறிஞ்சிப்பாடி : 

                  வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மின் கட்டணம் வசூல் செய்யும் முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. 

குறிஞ்சிப்பாடி கோட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயற் பொறியாளர் ஜெயராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                   குறிஞ்சிப்பாடி கோட்டத்தில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் குறைந்த மின்னழுத்த மின் இணைப்புக்கான மின்கட்டண கணக்கீடு மற்றும் வசூல் பணியை மாற்றம் செய்து மாதம் முழுவதும் வேலை நாட்களில் கணக்கீடு மற்றும் வசூல் பணியை புதிய செயல் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இத்திட்டம் வரும் 2011 ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. 

             தற்போது நடைமுறையில் உள்ள மின் கணக்கிடும் பணி பிரதி மாதம் 16ம் தேதி தொடங்கி கணக்கு எடுத்த பின் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் வசூல் பணி நடைபெறுகிறது. இம்முறையை மாற்றி, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மாத கடைசி வரை கணக்கீட்டு பணியும், மின் கணக்கு முடிந்த இரண்டாம் நாள் முதல் பணம் செலுத்தும் புதிய செயல் திட்டத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிமுகம் செய்துள்ளது. 

              மின் கணக்கீடு செய்த 20 நாட்களுக்குள் பணம் செலுத்த தவறினால் மின் துண்டிப்பு, அபராத தொகை வசூல் செய்யப்படும். மேலும், இணைய தளம் மூலம் பணம் செலுத்தும் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான www.tneb.in இணைய தளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு செயற் பொறியாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior