பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பெரும்பாலும் தேர்தல் முடிவு வெளியான பிறகே வெளியிடப்படும் என்று தெரிகிறது.
தேர்வு முடிவுகள் தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:
பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி இப்போது ஏறத்தாழ முடிந்துவிட்டது. இதையடுத்து, மதிப்பெண்களைப் பதிவு செய்வது, சரிபார்ப்பது, மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிப்பது உள்ளிட்டப் பணிகள் 4 வாரங்கள் வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியிடத் தயாரான பிறகு, தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடனோ அல்லது புதிய அரசு அமைந்தவுடனோ வெளியிடப்படும்.
இதுகுறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். தமிழக பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதியும் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுக்குப் பிறகு, புதிய அரசு அûமைந்த ஓரிரு நாளில் முடிவுகள் வெளியிடப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் 25 வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை 7.23 லட்சம் மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர். தனித்தேர்வர்களாக 57 ஆயிரம் பேரும் எழுதியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக