உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
திங்கள், ஏப்ரல் 11, 2011

கடலூர் திமுக எம்.எல்.ஏ.அய்யப்பன் அதிமுகவில் இணைந்தார்

              கடலூர் தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன், நேற்று அதிமுகவில் சேர்ந்தார்.


              நடப்பு சட்டப்பேரவைக்கு திமுக சார்பில் கடலூர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் ஐயப்பன் இந்தமுறையும் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பியிருந்தார். ஆனால், இள.புகழேந்தி என்பவருக்கு திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த ஐயப்பன், போட்டி வேட்பாளராகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனால் இரு தினங்களுக்கு முன்னர் திமுக அவரை கட்சியில் இருந்து நீக்கியது.         


            இந்நிலையில் நேற்று  பகல் அவர் போயஸ் தோட்டத்திற்குச் சென்றார். அப்படியே அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior