உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், ஏப்ரல் 11, 2011

விருத்தாசலம் அருகே குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய சாரண மாணவிக்கு பாராட்டு விழா

விருத்தாசலம் : 

         கோ.ஆதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றிய மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.

             விருத்தாசலம் அடுத்த கோ.ஆதனூரைச் சேர்ந்தவர் அருணாசலம் மகள் அன்புமொழி. அரசு உயர்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவி. இவர் சாரண இயக்கத்தில் சேர்ந்து முதலுதவி உள்ளிட்ட பயிற்சி பெற்று வருகிறார். கோ.ஆதனூரில் மாணவி அன்புமொழி வசிக்கும் தெருவில் உள்ள ஒருவரது வீட்டிற்கு பெரியகோட்டிமுளை கிராமத்தில் இருந்து உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் வந்த ஒன்றரை வயது குழந்தை நதியா அந்த தெருவில் தண்ணீர் நிறைந்த இருந்த பள்ளத்தில் தவறி விழுந்தது.
 
             இதை கண்ட மாணவி அன்புமொழி ஓடி சென்று அந்த குழந்தையை தூக்கினார். தண்ணீரில் மூழ்கியதால் சுவாசம் நின்று போனதை கண்ட மாணவி அன்புமொழி, வாய் மூலம் ஊதி சுவாசத்தை உண்டாக்கினார். இதனால் குழந்தை உயிர் பிழைத்தது.  மாணவியின் இச்செயலை பாராட்டும் வகையில் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சங்கவதி மாணவி அன்புமொழியை பாராட்டி ஊக்கப் பரிசு வழங்கினார். கிராம பொது மக்களும், சக மாணவர்களும் பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior