உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், ஏப்ரல் 11, 2011

கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்ப்புகடலூரில் சனிக்கிழமை நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கடலூர் மாவட்ட திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார் முதல்வர் கருணாநிதி.
கடலூர்:
 
           தேர்தல் கமிஷன் தனது குறைகளைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.  
 
கடலூர் மாவட்ட திமுக கூட்டணிக் கட்சி வேட்பளர்களை அறிமுகம் செய்து வைத்து சனிக்கிழமை கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசியது:  
 
              திமுக இந்தத் தேர்தல் கூட்டணியில் கடலூர் மாவட்டத்தில் 9 வேட்பாளர்ளை நவரத்தினங்கள் போல் நிறுத்தியிருக்கிறது. தேர்தலில் தவறு நடக்கக் கூடாது, பணம் கொடுத்து வாக்கு பெறக்கூடாது, அதிக பணம் செலவிடக்கூடாது, தவறான வழியில் செல்லக் கூடாது என்று எல்லோருக்கும் தேர்தல் ஆணையம் வழங்கும் அறிவுரை. அதை தேர்தல் கமிஷன் கடைபிடிக்கிறது. அதை நான் மறுக்க வில்லை. அதற்கு அடங்கி நடக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை. எதற்கும் ஒரு அளவு இருக்கிறது. எல்லை கடக்கக் கூடாது.  
 
            நரிக்கு நாட்டாமை கொடுத்தால் 2 ஆடுகள் கேட்கும் என்பது பழமொழி. தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தை, நரிக்குக் கிடைத்த நாட்டாமைபோல் அவர்கள் பயன்படுத்தக் கூடாது. நான் உச்சத்தில் இருப்பவர்களைப் பார்த்து சொல்லவில்லை. அடுத்து கீழே இருக்கும் அதிகாரிகளைச் சொல்கிறேன்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்னமும் முதல்வராக பதவியில் இருப்பவன் நான். 13-ம் தேதி ஓட்டு எண்ணிப்பார்த்து அதிக வாக்குகள் இருந்தால் நான் மீண்டும் முதல்வர். இல்லையெனில் நான் வீட்டுக்குப்போக வேண்டியவன். அரசியல் சட்டப்படி, தேர்தல் ஆணையத்தின் பார்வையின்படி அதுவரை நான் முதல் அமைச்சர்தான்.  
 
              நேற்று நான் விழுப்புரம் கூட்டத்தில் பேசி முடித்து இரவு தங்கும் இடம் எது என்று கேட்டபோது பொன்முடி கூறினார், அரசு இடம் எதுவும் தரமுடியாது என்று சொல்லி விட்டார்கள். நமது கட்சி அலுவலகத்தில் தங்கிவிடலாம் என்றார். அதைவிட பூரிப்பு எனக்கு வேறு ஒன்றுமில்லை. நமது முயற்சியால் கட்டிய மாளிகை அது. நமது கட்சியிடத்தில் தங்குவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.  எனக்கு ஒரு பயணியர் விடுதியில் தங்குவதற்கு ஒதுக்கப்படாததற்கு என்ன காரணம். தேர்தல் கமிஷனின் கண்டிப்பு. நான் ஊர் ஊராக நகரம் நகரமாகச் சுற்றி, தரையில் துண்டை விரித்துப்போட்டு தூங்கியவன். 
 
             இன்று புதுவையில் இருந்து கடலூர் வரும் வழியில் மாலைச் சிற்றுண்டிகூட சாப்பிட இடமின்றி வழியில், வேனை நிறுத்தி கூடவந்தவர்களின் துண்டை விரித்துப்போட்டு சாப்பிட்டேன்.  ÷என்னைவிட கேவலமாக, இழிவாக நிறையபேர் இந்த நாட்டில் இருப்பதை நான் அறிவேன். எனது அந்தரங்க அதிகாரியாக இருந்தவரை உடனே அகற்ற வேண்டும் என்று ஜெயலிலதா பொதுக் கூட்டத்தில், தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடுகிறார். ஏற்கனவே இருந்த அதிகாரி மாற்றப்பட்டு, வேறு அதிகாரியும் வந்து இருக்கிறார். 

              அந்த அதிகாரியையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதா உத்தரவிடுகிறார். ஒருவேளை அவரும் மாற்றப்படலாம். அதிகாரிகளை வைத்துக் கொண்டு வாழ்க்கையைத் தொடங்கியவன் அல்ல. அதிகாரிகளை வைத்துக் கட்சி நடத்துபவன் அல்ல நான். எனது தொண்டன் முதுகை மேடையாக்கி அதில் பேசியவன் நான்.  பிரதமரும் தேர்தல் ஆணையத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தை எப்படி அமைப்பது, யார் யாரைக் கொண்டு அமைப்பது எந்த வகையில் அதிகாரங்களை அமல்படுத்த வேண்டும் என்ற நிலையை இனியாவது மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior