உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வெள்ளி, ஏப்ரல் 08, 2011

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன் வாக்கு சேகரிப்புதொலைநோக்கு பார்வையில்

 

 திட்டங்களை நிறைவேற்றியவர் முதல்-அமைச்சர் கருணாநிதி;

 

 தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன் பேச்சு

நெல்லிக்குப்பம்:
             பண்ருட்டி தொகுதி சட்டமன்ற தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன், நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட விஸ்வாதபுரத்தில் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டார். பின்னர் வான்பாக்கம், கீழ்பட்டாம்பாக்கம், காமராஜர் நகர், அண்ணா நகர் உள்பட 15 வார்டுகளில் வாக்கு சேகரித்தார்.


அப்போது பண்ருட்டி தொகுதி சட்டமன்ற தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன்  பேசியது:-                தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் சொன்னதையும், சொல்லாததையும் சேர்த்து திட்டப்பணிகளை செய்தவர் முதல்-அமைச்சர் கருணாநிதி. தமிழ்நாட்டில் தொலை நோக்கு பார்வையில் திட்டங்களை செய்தவர் முதல்-அமைச்சர் கலைஞர். நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிக்கு மட்டும் இதுவரை ரூ.10 கோடி நிதி உதவி திட்டங்களை செய்தவர் முதல்-அமைச்சர். தமிழ்நாட்டில் மீண்டும் திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற 6-வது முறையாக கலைஞர் முதல்-அமைச்சராகி பணிகள் செய்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப்பெற செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன் பேசினார்.             வேட்பாளருடன் நகரமன்ற தலைவர்கள் கெய்க்வாட்பாபு, பச்சையப்பன், நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணன், காந்திராஜ், நகர தலைவர் திலகர், பா.ம.க. நகர செயலாளர் வேலாயுதம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் முல்லைவேந்தன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பழனிசாமி, தி.மு.க. நிர்வாகிகள் ஜெயசீலன், முகமது அனீப், சம்பத், தனகோடி, நந்தகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior