கடலூர்:
ஒரே அணியில் பா.ம.க - வி.சி., கட்சி இடம் பெற முதல்வர் கருணாநிதி வாய்ப்பு வழங்கியுள்ளார்,'' என திருமாவளவன் பேசினார்.
கடலூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு, கடலூர் மஞ்சக்குப்பத்தில் அவர் பேசியது:
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரம், சொந்த சின்னம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். வி.சி., போட்டியிடும் தொகுதிகளில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், பா.ம.க., ராமதாஸ், கனிமொழி எம்.பி., ஆகியோர் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
பா.ம.க., வேட்பாளருக்கு ஆதரவாக மாம்பழம் சின்னத்தில் ஓட்டளிக்க நானும், வி.சி., வேட்பாளர்களுக்கு மெழுகுவர்த்தி சின்னத்தில் ஓட்டளிக்க பா.ம.க., நிறுவனர் ராமதாசும் பிரசாரம் செய்கிறோம். பா.ம.க., - வி.சி., இணையுமா என்று 10 ஆண்டுகளுக்கு முன் நினைத்திருப்போமா. பா.ம.க., - வி.சி., ஒரே அணியில் இடம் பெற முதல்வர் கருணாநிதி வாய்ப்பு வழங்கியுள்ளார்.
எனவே, முதல்வர் கருணாநிதியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும். தி.மு.க., ஆட்சியில் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் நடைமுறையில் உள்ளது. கருணாநிதி மீண்டும் முதல்வரானால், கூரை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக