உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 18, 2011

கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா: ஐ.ஐ.டி., இயக்குனர் ஆனந்த் பங்கேற்ப்பு

நெல்லிக்குப்பம் : 

         ""மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் ஒழுக்கம் பண்பாட்டில் சிறந்து விளங்கினால் தான் முன்னேற முடியும்'' என ஐ.ஐ.டி., இயக்குனர் ஆனந்த் பேசினார். 

             கடலூர் அடுத்த குமராபுரம் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி சேர்மன் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். டிரஸ்டி டாக்டர் ஞானசுந்தரி முன்னிலை வகித்தார். முதல்வர் சிவஞானம் வரவேற்றார். ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தங்கப் பதக்கத்துடன் 10,000 ரூபாய், இரண்டாமிடம் பிடித்த மாணவர்களுக்கு வெள்ளி பதக்கத்துடன் 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. விழாவில் செயலர் விஜயகுமார், டிரஸ்டி ராஜாராமன், ஆனந்த், புவனேஸ்வரி, இயக்குனர் எத்திராஜுலு உட்பட பலர் பங்கேற்றனர்.

சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் ஆனந்த் பட்டங்களை வழங்கி பேசியது: 

                 அனைவரும் கடவுள் மீது நம்பிக்கை வைத்தால் தான் ஒழுக்கமுடன் வாழ முடியும். ஒரே பாடத்தை திரும்பத் திரும்ப கூறுவதால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். இந்தியன் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். வன்முறை எதிர்ப்பு, உண்மை, பயமின்மை இந்த மூன்றையும் பின்பற்ற வேண்டுமென காந்தி கூறினார். ஜனநாயகம் சிறக்க வேற்றுமையில் ஒற்றுமை நிலவ வேண்டும். ராணுவத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் செலவு செய்வதில் தவறில்லை. பசுமை புரட்சியால் உணவு பற்றாக்குறை நீங்கியது. வெண்மை புரட்சியால் பால் உற்பத்தியில் முதலிடம் பிடித்தோம்.

                வாழ்க்கையில் தாய் தான் முதல் கடவுள். குருவையும் கடவுளாக மதிக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கடந்த காலத்தில் ஊருக்கு ஒரு ரேடியோ மட்டுமே இருந்தது. தற்போது எங்கும் மொபைல் போன், இன்டர்நெட் வந்து விட்டது. இவற்றை நல்லதுக்கு பயன்படுத்த வேண்டும். ஐ.டி., துறை முன்னேறியுள்ளது. அனைத்து துறைகளிலும் போட்டியை வளர்த்து கொண்டால் தான் முன்னேற முடியும். கல்வியில் மட்டும் சிறந்து விளங்கினால் போதாது, பண்பாடு, ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும். இவ்வாறு ஐ.ஐ.டி., இயக்குனர் ஆனந்த் பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior