தினமணி நாளிதழும்-நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகளை நடத்தவுள்ளது.
என்.எல்.சி. நிறுவனத்தின் ஆதரவுடன் 14-வது ஆண்டாக நடைபெறும் நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூலை 1 முதல் 10-ம் தேதிவரை நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் அரங்கில் நடக்கவுள்ளது. இப் புத்தகக் கண்காட்சியையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தினமணி நாளிதழும், புத்தகக் கண்காட்சி குழுவும் ஆண்டுதோறும் கட்டுரைப் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி வருகின்றன. இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கவிருக்கும் மாணவ,மாணவிகளிடமிருந்து கீழ்கண்ட தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தலைப்புகள்: 1. தீதும் நன்றும் பிறர் தர வாரா, 2. பணவீக்கமும், விலைவாசி உயர்வும்-இந்தியாவை பாதிக்கும் நிதர்சன உண்மை, 3. அணுசக்தியின் பயன்களும், பயங்களும்.போட்டிக்கான
நிபந்தனைகள்:
கட்டுரைகள் 1,500 சொற்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஒருவரே 3 தலைப்புகளிலும் கட்டுரை அனுப்பலாம். கட்டுரை சொந்த முயற்சியில எழுதப்பட்டிருப்பதற்கான மாணவரின் உறுதிமொழி இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.பள்ளி அல்லது கல்லூரி மாணவர் என்பதற்கான சான்று இணைக்கப்பட்டிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படாத கட்டுரைகள் திருப்பி அனுப்பப்படமாட்டாது. பரிசுகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் போது வழங்கப்படும்.
தகவல் தெரிவிக்க ஏதுவாக மாணவர்கள் தங்களது கட்டுரை முகப்பில் தாங்கள் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியின் முகவரியுடன், வீட்டு முகவரியையும் குறிப்பிடவேண்டும். போட்டி முடிவுகள் ஜூன் கடைசி வாரத்தில் தினமணி நாளிதழில் வெளியாகும்.
முதல் பரிசு ரூ.2 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.1,500. 3-ம் பரிசு ரூ.1,000. இதுதவிர ஆறுதல் பரிசாக 5 பேருக்கு தலா ரூ.500 மற்றும் நெய்வேலி மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக ரூ.500 6 பேருக்கு வழங்கப்படும்.
கட்டுரைகளை ஜூன் 4-ம் தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
செயலாளர்,
நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி,
முதன்மைப் பொதுமேலாளர் தொழிலக பொறியியல் பிரிவு,
தலைமைச் செயலகம்,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,
வட்டம் 1,
நெய்வேலி- 607801,
கடலூர் மாவட்டம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக