உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 18, 2011

நெய்வேலித் தொகுதிக்குட்பட்ட சமுட்டிக்குப்பம் கிராமத்தில் மறுவாக்குப் பதிவு

கடலூர் மாவட்டம், நெய்வேலித் தொகுதிக்குட்பட்ட சமுட்டிக்குப்பம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மறுவாக்குப் பதிவின்போது வரிசையில் நின்று வாக்களித்தவர்கள்
நெய்வேலி:

           வாக்குப் பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதால் மறுவாக்குப் பதிவு நடந்த சமுட்டிக்குப்பம் கிராமத்தில் 83 சதவீத வாக்குகள் பதிவாயின. கடலூர் மாவட்டம், நெய்வேலித் தொகுதிக்குட்பட்ட சமுட்டிக்குப்பம் கிராமத்தில் புதன்கிழமை ஏற்பட்ட கலவரத்தால் 55, 56 எண் வாக்குச் சாவடிகளில் இருந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டது. 

               வாக்குப் பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டது தொடர்பாக சமுட்டிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பூவராகமூர்த்தி உட்பட 47 பேர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.இதையடுத்து சமுட்டிக்குப்பம் வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் நடத்தப்படும் என நெய்வேலித் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.கந்தசாமி தெரிவித்தார். இதையடுத்து சனிக்கிழமை மறுவாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் அமைதியான முறையில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

                 வாக்குப் பதிவை முன்னிட்டு சமுட்டிக்குப்பம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவின்போது விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றது. பிற்பகல் மதிய உணவு வேளையின் சற்று மந்தமாக இருந்த வாக்குப் பதிவு மாலை 3 மணிக்கு மேல் விறுவிறுப்பாகக் காணப்பட்டது. வாக்கெடுப்பில் கலந்து கொண்ட வாக்காளர்கள் இதுபோன்ற சம்பவங்கள் இத்தனை ஆண்டு காலத்தில் நடைபெற்றதில்லை. முதன்முறையாக மறுதேர்தல் நடைபெறுகிறது. இ

               துபோன்ற அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழக்கூடாது என்பதை மனதில் கொண்டு வாக்களித்திருக்கிறோம் என்றனர் வாக்காளர்கள்.வாக்குப் பதிவு தொடங்கியது முதல் முடியும வரை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், தலைமை தேர்தல் கூடுதல் ஆணையர் ராஜேந்திரன், நெய்வேலித் தொகுதி பொதுத் தேர்தல் பார்வையாளர் டி.டி.அந்தோணி, செலவு கண்காணிப்பு பாவையாளர் தினேஷ்சிங், மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் ஆகியோர் வாக்குப்பதிவு நடைபெறும் மையம் அருகே முகாமிட்டு இருந்தனர்.

மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு விவரம் குறித்து ஆட்சியர் பெ.சீதாராமன் கூறியது. 

               வாக்குச்சாவடி 55, 56-ல் உள்ள மொத்த வாக்காளர்கள் 2,098.இதில் மறுவாக்குப் பதிவின் போது 1752 பேர் கலந்துகொண்டு வாக்களித்தனர். இது சதவீத அடிப்படையில் 83 சதவீதமாகும்.13-ம் தேதி நடந்த வாக்குப் பதிவின் போது 88 வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரு வாக்குச் சாவடிகளிலும் ஆண்களைவிட பெண்கள் கூடுதலாக கலந்து கொண்டு வாக்களித்தனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior