உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், மே 02, 2011

49 ஓ வாக்களித்தவர்கள் குறித்து விசாரித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை

கடலூர்:

               சட்டப் பேரவைத் தேர்தலில் 49 (ஓ) விதியின் கீழ் (யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை) தங்கள் வாக்கைப் பதிவு செய்த நபர்கள் பற்றி, விசாரணை செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

 கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு வியாழக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு: 

                     2011 சட்டப் பேரவைத் தேர்தலில் 23 ஆயிரம் பேர் 49 (ஓ) பிரிவின் கீழ் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து உள்ளனர். இதனால் அவர்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதைப் பதிவு உள்ளனர். வாக்குப் பதிவு ரகசியத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்று தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்தது. ஆனால் தற்போது 49 (ஓ) பிரிவில் வாக்குப் பதிவு செய்தவர்களை போலீசார் விசாரிப்பதாக வரும் தகவல் மிகவும் கண்டிக்கத்தக்கது. 

              நக்ஸலைட்டுகள், தீவிரவாதிகள், அவர்களின் இயக்கங்களை ஆதரிப்போர், உறுப்பினர்களாக இருப்போர் எனக் குற்றம் சாட்டப்பட்டு இருந்தாலும் வாக்களிக்க உரிமை உண்டு.அவர்கள் 49 (ஓ) பிரிவில் வாக்குப் பதிவு செய்து இருந்தால் அவர்கள் விசாரணைக்கு அப்பாற்பட்டவர்கள். எனவே 49 (ஓ) பிரிவில் வாக்களித்தவர்கள் மீது விசாரணை நடத்திய அதிகாரிகள் மீதும், அத்தகைய ரகசியத்தை வெளியிட்ட தேர்தல் அலுவலர்கள் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து, அதன் விவரத்தை பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். இதுபோன்ற பிரச்னைகள் இனி எழாமல் இருக்கவே, வாக்குப் பதிவு இயந்திரத்திலேயே 49 (ஓ) பிரிவுக்கான வசதியை, தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என்றும் மனுவில் கேட்டுகொண்டுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior