உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
திங்கள், மே 02, 2011

கடலூரில் மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி மகளிர் பேரணி


மதுவுக்கு எதிராக கடலூரில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்திய மகளிர் அமைப்புகள்.
 

கடலூர்:

              மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி கடலூரில், மகளிர் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  பல்வேறு பொதுநல அமைப்புகள், மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

             பேரணியை எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனத் தலைவர் எம்.பி. நிர்மல் தொடங்கிவைத்தார்.  மஞ்சக்குப்பம் மைதானத்தில் இருந்து மகளிர் பேரணி புறப்பட்டு, புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது. கடலூர் விழுப்புரம் மாவட்ட ஆர்.சி. பள்ளிகளில் மேலாளர் சிஸ்டர் அருள்புஷ்பம் தலைமை தாங்கினார். பிளஸ் தொண்டு நிறுவனத் தலைவர் எல்.எஸ்.அந்தோனிசாமி, அண்ணா கிராமம் ஒன்றிய மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தலைவி டி.அபிராமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.எஸ்.வேலுமணி வரவேற்றார்.

              எக்ஸ்னோரா நிறுவனத் தலைவர் நிர்மல், எக்ஸ்னோரா தலைவர் சுலோச்சனா ராம சேஷன், இளைஞர் எக்ஸ்னோரா தலைவர் கே.அப்துல்கனி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ், பேராசிரியை மணிமேகலை சித்தார்த்தன், போதகர் ராஜன் கோயில்பிள்ளை, அரிமா சங்கத் தலைவர் என்.சாயிராபானு உள்ளிட்ட பலர் பேசினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior