உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 02, 2011

கடலூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு பகுதியில் நல்லபாம்பு

கடலூர்:
            கடலூர் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து புதராக காணப்பட்டது. இன்று காலையில் அந்த செடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு ஊழியர்கள் ஈடுபட்டனர். 
               
                   அந்த வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தபோது புதருக்குள் புஸ்... என்ற சத்தத்துடன் ஒரு நல்லபாம்பு படமெடுத்தது. 31/2 அடி நீளமுள்ள அந்த பாம்பை கண்டு கை, கால்கள் வெடவெடத்துப்போன ஊழியர்கள் துப்புரவு பணியை நிறுத்தி விட்டு மருத்துவமனை சூப்பிரண்டு டாக்டர் ராமச்சந்திரனிடம் தெரிவித்தனர். பாம்புகளை உயிருடன் பிடிப்பதில் கில்லாடியான கடலூரை சேர்ந்த வாலிபர் பூனம்சந்துக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

           அவர் பாம்பு பிடிப்பதற்காக கம்பினால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கருவியுடன் விரைந்து வந்தார். புதருக்குள் இருந்து கொண்டு “வாலாட்டிய” அந்த நல்ல பாம்பை பூனம்சந்த் லாகவமாக பிடித்தார். அவரது கையில் உள்ள கம்பில் இருந்தவாறு படமெடுத்த பாம்பை கண்டவுடன் திரண்டிருந்த நர்சுகள், பெண்கள் உள்ளிட்டோர் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பிறகு அந்த நல்லபாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காட்டில் விடப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior