பி.எஸ்.சி., பி.ஏ., பட்டதாரிகளைப் போல் இனி பி.காம்., பட்டதாரிகளும் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்றலாம் என அரசு தெரிவித்துள்ளது.
            பள்ளிகளில் 6ம்  வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கான நியமன தேர்வில் இனி  பி.காம்., பட்டதாரிகளும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டடுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி  கழகத்திற்கு மாநில அரசுகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களிடமும் இருந்த  கோரிக்கையின்படியும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பி.காம்., பட்டதாரிகளும்  இனி ஆசிரியர் பணியாற்றலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கான முறையான உத்தரவு விரைவில் வெளியாகும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

0 கருத்துகள்:
கருத்துரையிடுக