சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 8, 9-ம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
மாணவர்களும், ஆசிரியர்களும் இந்தப் புத்தகங்களை புதன்கிழமை முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்கள் வெளிவருவதில் தாமதம் ஏற்படுவதாக மாணவர்களும், பெற்றோர்களும் கவலை தெரிவித்தனர். இதையடுத்து, பத்தாம் வகுப்பு புத்தகங்கள் இணையதளத்தில் ஏப்ரல் 21-ம் தேதி வெளியிடப்பட்டன. இந்தப் புத்தகங்களை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பார்க்கவும், பதிவிறக்கமும் செய்ததால் இணையதளம் முடங்கியது.
இந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டு, இப்போது அனைவரும் பதிவிறக்கம் செய்யும் வகையில் பத்தாம் வகுப்பு புத்தகங்கள் இணையதளத்தில் கிடைக்கின்றன.இந்த நிலையில், தனியார் பள்ளி நிர்வாகிகள் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.அதைத்தொடர்ந்து, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 8, 9-ம் வகுப்பு பாடப்புத்தகங்களும் பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன
.இந்தப் புத்தகங்களை இணையதளத்தில் பார்ப்பதில் சிறிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது புதன்கிழமை காலைக்குள் சரிசெய்யப்பட்டுவிடும். அதன்பிறகு, மாணவர்களும், ஆசிரியர்களும் புத்தகங்களைப் பார்வையிடலாம்; பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்' என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக