உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 04, 2011

கடலூரில் கடல் சீற்றம்


திடீரென ஏற்பட்ட கடல் அரிப்பினால் கடலூர் தாழங்குடா மீனவர் பகுதியில் உள் புகுந்த கடல்நீர்.
கடலூர்:

                     கடல் சீற்றம் காரணமாக, கடலூர் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை.கடல் வளத்தைப் பெருக்கும் வகையில், தற்போது கடலில் மீன்பிடிக்க பெரிய படகுகளுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

            கட்டுமரங்கள் மற்றும் சிறிய கண்ணாடி இழைப் படகுகள் வழக்கம்போல் மீன் பிடித்து வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் கட்டுமரங்கள் மற்றும் கண்ணாடி இழைப் படகுகள் சுமார் 25 ஆயிரம் உள்ளன. கடலூரில் மட்டும் 10 ஆயிரம் படகுகள் உள்ளன.இந்நிலையில் கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் 2 நாள்களாக அதிகமாக உள்ளது. இதனால் திங்கள்கிழமை சுமார் 20 சதவீத படகுகளே மீன் பிடிக்கச் சென்றன. செவ்வாய்க்கிழமை படகுகள் முற்றிலும் மீன் பிடிக்கச் செல்லவில்லை என்று மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் தெரிவித்தார்.கடல் சீற்றம் அதிகரித்து உள்ளதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை என்றும், பொதுவாக 10 நாள்களாக கடலில் மீன்கள் அதிகம் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். 

               கடல் சீற்றம் அதிகரித்து இருப்பதான் காரணமாக, தாழங்குடா, சிங்காரத்தோப்பு, சொத்திக்குப்பம் கடலோரப் பகுதிகளில் பெருமளவு கடல் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. தாழங்குடா பகுதியில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, 100 அடி தூரம் நிலப் பரப்பு முழுவதும் கடல் நீரில் மூழ்கி விட்டது என்றும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகள் பல கடலுக்குள், இழுத்துச் செல்லப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். சிங்காரத்தோப்பு, சொத்திக்குப்பம் பகுதிகளில் கடற்கரையோரம் உள்ள சவுக்குத் தோப்புகளிலும் கடல் அரிப்பு ஏற்பட்டு, சவுக்கு மரங்கள் சாய்ந்து கிடப்பதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior