உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 05, 2011

கடலூரில் வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தில் கள்ள நோட்டு

கடலூர் : 

             கடலூரில், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

              சட்டசபைத் தேர்தலில், வாக்காளர்களிடம் இருந்து ஓட்டுகளை பெற, வேட்பாளர்கள், அன்பளிப்பு மற்றும் பணத்தை தண்ணீராக செலவு செய்தனர். இந்த பணத்தை, கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், வீடு வீடாக வினியோகம் செய்தனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில சமூக விரோதிகள், தேர்தலுக்கு வினியோகிக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டுகளை கலந்து கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன், பிரபல நகைக்கடை மற்றும் வணிக நிறுவனங்களில் விற்பனையாகும் தொகையில், நாளொன்றுக்கு, 4,000 முதல், 6,000 வரை, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது, வங்கிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

             இதனால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க, பெரிய வணிக நிறுவனங்கள், 500 ரூபாய் நோட்டுகள் கொடுப்பதை, அறவே தவிர்த்து விட்டு, வெறும் 100 ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அதேபோன்று, போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் நடத்துனர்களிடம், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் வருவதாக கூறப்படுகிறது. இதை, நடத்துனர்கள் உடனடியாக சோதித்துப் பார்க்கும் வசதியில்லாததால், டெப்போவில் கலெக்ஷன் பணத்தை செலுத்தும் போது தான் தெரிய வருகிறது. இதனால் ஏற்படும் இழப்பைக் கண்டு, 500 ரூபாய் நோட்டு என்றாலே நடத்துனர்கள் பலர் அலறுகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior