உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், மே 05, 2011

கடலூர் முதுநகரில் பராமரிக்கப்படாத காந்தி பூங்கா

முதுநகர்:

         முதுநகர் காந்தி பூங்கா சரியாக பராமரிக்கப்படாததால் பொலிவிழந்து காணப்படுகிறது.

             முதுநகர் மக்களின் வார விடுமுறை நாட்களில் நேரத்தை செலவழிப்பதற்கு பொழுது போக்குவதற்கான இடம் இல்லாமல் இருந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு ஏற்கனவே இருந்த முதுநகர் காந்தி பூங்கா 11.50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. புதிய விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டதால் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் கூட்டம் அதிகரித்தது. 

             வார விடுமுறை நாட்களில் பூங்காவில் கூட்டம் அலை மோதியது. ஆனால் தற்போது முறையான பராமரிப்பில்லாததால் பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது. பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்தும், பூங்காவிற்கு வருபவர்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த நாற்காலிகள், பெஞ்சுகள் பெரும்பாலானவை உடைந்து காணப்படுகிறது. பூங்காவில், விடுதலை போராட்டத்தில் சிறை சென்று சிறையிலேயே உயர் நீத்த 27 விடுதலை வீரர்களின் நினைவாக கல்வெட்டுடன் கூடிய நினைவு கோபுரம் அமைக்கப்பட்டது. 

            வரலாற்றுச் சுவடாக உள்ள இந்த நினைவு கோபுரமும் முறையாக பராமரிப்பில்லாமல் பொலிவிழந்து வருகிறது. இதன் காரணமாக குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடுவதை பார்ப்பதற்காக விரும்பி அழைத்து வரும் பெற்றோர்கள் தற்போது இந்த பூங்கா பக்கம் வருவதேயில்லை. நகராட்சி நிர்வாகம் பூங்காவை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior