உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 05, 2011

லாபம் தரும் ரோஜ சாகுபடி


பூண்டி ஒன்றியம் ரங்காபுரத்தில் உள்ள ரோஜாத் தோட்டம். (உள்படம்) விவசாயி வேலு.
 
        
      தோட்டப்பயிரில் ஒரு முறை முதலீடு செய்தால் 3 ஆண்டுகள் வரை தொடர்ந்து தினம், தினம் லாபம் தருவது ரோஜா தோட்டம். 
 
             சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் மலர்களில் ஒன்று ரோஜா. திருமண சுபக் காரியங்களுக்கும், இறந்தவர்களின் மேல் அணிவிக்கும் மாலைகளிலும் ரோஜாமலர் இடம்பெறும். ரோஜாவில் நாட்டு ரோஜா, பெங்களூர் ரோஜா, பன்னீர் ரோஜா, வெள்ளை ரோஜா, மஞ்சள் ரோஜா என பல வகையான ரோஜாக்கள் தமிழகத்தில் விளைகின்றன.
 
குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை ஈட்டித் தரும் ரோஜா தோட்டம் குறித்து பூண்டி ஒன்றியம் ரங்காபுரத்தைச் சேர்ந்த விவசாயி வேலு கூறியது:
 
             ""ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து ஒரு செடி ரூ.5 என்ற விலையில் 1600 செடிகளை வாங்கி வந்தேன். ரோஜா செடியை ஒரு அடிக்கு ஒரு செடி என இடைவெளி விட்டு நட்டு வைத்தால் ஏக்கருக்கு 3600 செடி வரை நட்டு வைக்க முடியும். ரோஜா செடிகளை பொறுத்தவரை நட்டு வைத்த 3 மாதத்துக்குப் பிறகு பூக்களை பறித்துக் கொள்ளலாம். தினமும் காலை நேரத்தில் பூக்களைப் பறித்து விற்பனைக்கு எடுத்துச் செல்லலாம். ரோஜா தோட்டத்தை பொறுத்தவரை பராமரிக்க ஆட்கள் அதிகளவில் தேவையில்லை. பராமரிப்பு செலவும் குறைவு.
 
            மாதம் இருமுறை அதற்கு தண்ணீர் ஊற்றி தோட்டத்தைக் கிளறி அதற்கேற்றார் போல் உரங்களையோ அல்லது அதன் தேவைகளைப் பூர்த்தி செய்தால் ஒரு தடவை நட்ட செடியில் இருந்து 3 ஆண்டுகள் வரை தொடர்ந்து லாபம் பெறலாம். நான் பயிரிட்டிருப்பது நாட்டு ரோஜா. இந்தப் பூக்களை தினமும் காலையில் பறித்து திருவள்ளூர் உழவர் சந்தை அல்லது கோயம்பேடு மார்க்கெட் போன்ற பகுதிகளில் சென்று 100 ரோஜா ரூ.20 முதல் அன்றைய மார்க்கெட் விலை நிலவரத்துக்கேற்ப விற்று விடுவேன் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior