உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 25, 2011

கிராமங்கள் தோறும் சேவை ரிசர்வ் வங்கி புதிய திட்டம்

கடலூர் : 

           அனைவருக்கும் சேவை கிடைக்க கிராமங்கள் தோறும் வங்கியை நிறுவ ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
 
இது குறித்து ரிசர்வ் வங்கி உதவிப்பொது மேலாளர் ஞானவேல் கூறியது: 

           நகரம் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அதற்கு வங்கி சேவை அவசியம். வங்கி சேவை கிடைக்காத கிராமங்கள் பின் தங்கி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையை மாற்றியமைக்க கிராமங்களில் வங்கி சேவையை துவக்கிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அதன் முதன்கட்டமாக 2000 பேர் வசிக்கக்கூடிய கிராமத்திற்கு வங்கி சேவையை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
              கடலூர் மாவட்டத்தில் 219 கிராமங்கள் வங்கி சேவை துவக்குவதற்கு தகுதியான கிராமங்கள் என தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன்படி ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு வங்கி பொப்பேற்று சேவையாற்றிட வேண்டும். அவ்வங்கிகள் நிரந்தர வங்கியாகவும் நிறுவலாம், நடமாடும் வங்கியாகவும் செயல்படலாம், பிஸ்னஸ் கவுன்ட்டர் ஆகவும் இயக்கலாம். அந்தந்த வங்கியே அதற்கான செயல்பாடுகளை தேர்வு செய்து கொள்ளும். கிராமங்களில் உள்ள வரவேற்பை பொறுத்து வங்கிகள் தமது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளும்.
 
         இதில் பிஸ்னஸ் கவுன்ட்டர் செயல்படுத்த பல வங்கிகள் முன்வந்துள்ளன. கிராமங்களில் உள்ள நன்கு அறிமுகமான நபர்களை தேர்வு செய்து வங்கிகள் நியமிக்க உள்ளன. அந்த ஊழியரிடம் உள்ள சிறிய கருவி மூலம் பணத்தை வேறு கணக்குக்கு மாற்றவோ, முதலீடு செய்யவோ முடியும். ஒரு குறிப்பிட்ட இலக்குவரை இந்த கருவி மூலம் செயல்படுத்த முடியும். இந்த கருவி அருகில் உள்ள வங்கி கிளையோடு இணைக்கப்பட்டிருக்கும்.
 
            இத்திட்டம் கடலூர் மாவட்டத்தில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என கூறினார். கலெக்டர் சீத்தாராமன், பி.ஆர்.ஓ., முத்தையா உடனிருந்தனர். 


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior