உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 15, 2011

சிதம்பரம் அருகே பெண் கற்பழித்து புதைப்பு: 2 பேர் கைது, 3 பேரை பிடிக்க தனிப்படை



சிதம்பரம் அருகே கற்பழித்து கொன்று புதைக்கப்பட்ட  பெண் பிணம் தோண்டி எடுப்பு: தலைமறைவான 3 பேரை பிடிக்க போலீசார் தீவிரம்

நெய்வேலி:
            நெய்வேலியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மகள் கவிதா (வயது 22) இவர் நெய்வேலி மெயின் பஜாரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தார்.
 
            கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி வேலைக்கு சென்று விட்டு இரவு 9 மணிக்கு சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்து சேரவில்லை.  இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கவிதாவின் செல்போன் கடலூர் மாவட்டம் நரியங்குப்பத்தை சேர்ந்த கிருஷ்ணராஜியிடம் (22) இருப்பது தெரியவந்தது.
 
                  செல்போனில் அவர் வேறு ஒரு சிம்கார்ட்டை போட்டு பயன்படுத்தி வந்தார். ஆனால் செல்போன் குறியீட்டு எண்ணை (ஐ.எம்.இ.ஐ.) வைத்து அவரிடம் கவிதாவின் செல்போன் இருப்பதை கண்டுபிடித்தனர். நெய்வேலி மத்திய பஸ்நிலையம் அருகே நின்ற கிருஷ்ணராஜை நேற்று போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.  அப்போது கவிதாவை நண்பர்கள் 4 பேருடன் காரில் கடத்தி சென்று நெய்வேலி அருகே உள்ள சிலம்பிநாதன் பேட்டை முந்திரி தோப்பில் கற்பழித்து கொன்று விட்டு நகை, செல்போன் ஆகியவைகளை பறித்துக்கொண்டு புதுசத்திரம் அருகே கடலூர்-சிதம்பரம் சாலையில் மேட்டுப்பாளையம்- தீர்த்தனகிரி செல்லும் வழியில் சாலையோரம் பிணத்தை புதைத்து விட்டதாக கூறினார்.
 
            அவர் கொடுத்த தகவலின் பேரில் நரியங்குப்பத்தை சேர்ந்த பிரகாஷ் (22) என்பவனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் பத்திரக்கோட்டையை சேர்ந்த வேன் டிரைவர் தவமணி, கிருஷ்ணமூர்த்தி, சுதந்திரராஜன் ஆகியோருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட கிருஷ்ணராஜியும், பிரகாசும் கவிதா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தை நேற்று அடையாளம் காட்டினார்கள். அந்த இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
 
               கவிதாவின் பிணம் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது. தாசில்தார் அசோக்ராஜ் முன்னிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பராசக்தி தலைமையில் பிணம் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள தவமணி, சுதந்திர ராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 3 பேரும் நெய்வேலி, பண்ருட்டி ஆகிய பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் பதுங்கி இருக்கிறார்களா என்று போலீசார் தேடி வருகின்றனர். 


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior