உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 15, 2011

கடலூர் மாவட்டத்தில் முதியோர் உதவித் தொகை கோரி குவியும் விண்ணப்பங்கள்

கடலூர்:
 
             கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தி கூட்டங்களில், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு முதியோர் உதவித் தொகை கோரி விண்ணப்பங்கள் குவியத் தொடங்கி உள்ளன.  
 
          கடலூர் கோட்டாட்சியரிடம் மட்டும் கடந்த 7 நாள்களில் முதியோர் உதவித் தொகைக்காக சுமார் 800 மனுக்கள் பெறப்பட்டு இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  செவ்வாய்க்கிழமை முதியோர் உதவித் தொகை கோரி, கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 200-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதே நிலைதான் மற்ற வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஏற்பட்டதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.  
 
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 
 
           முதியோர் ஓய்வூதியத் தொகையை, முதல்வர் ஜெயலலிதா ரூ.500-ல் இருந்து ரூ. 1,000 ஆக உயர்த்தி இருக்கிறார். இதனால் ஏராளமானோர் முதியோர் உதவித் தொகை கோரி மனு அளிக்கிறார்கள். முதியோர் உதவித் தொகை வழங்க விதிமுறைகள் உள்ளன.  விதிமுறைகள் பொருந்தாத, வசதிபடைத்த பலரும் விண்ணப்பிக்கிறார்கள். வசதிபடைத்த பலருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டும் வருகிறது. 
 
               ஆனால் தகுதி உள்ள ஏழை எளிய மக்கள் பலருக்கு, முதியோர் உதவித் தொகை கிடைப்பது இன்னும் குதிரைக் கொம்பாகத்தான் உள்ளது என்றார்.  கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஜமாபந்தியில், ஆதரவற்ற விதவைகள் மூவருக்கும், 3 விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியத்துக்கான ஆணைகளை, கோட்டாட்சியர் முருகேசன் வழங்கினார்.
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior