உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 23, 2011

கடலூர் மாவட்டத்தில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்: மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி

 கடலூர்:

         கடலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதிக்குள், 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

         உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் விழா கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது. கடலூர் கிரீன் கிராஸ் சங்க உதவியுடன் இந்த விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. 

அப்போது மாவட்ட ஆட்சியர் கூறுகையில், 

          உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவற்றை மருத்துவமனை ஊழியர்கள் ஒவ்வொருவரும் மரக்கன்றுக்கு ஒருவர் வீதம் பொறுப்பேற்று, பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

            கடலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பள்ளிக் கல்வித் துறை, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து, 15-8-2011-க்குள் 2 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. பொதுமக்களும் தொண்டு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைத்து, 2 லட்சம் மரக்கன்றுகளை நட்டுப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றார் ஆட்சியர்.

           நிகழ்ச்சியில், மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் கமலக்கண்ணன், கிரீன் கிராஸ் சங்கச் செயலர் சங்கர், துணைத் தலைவர் ரங்கராஜன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பொ.முத்தையா, சிப்காட் தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் இந்திரகுமார், கெம்ப்ளாஸ்ட் தொழிற்சாலை முதன்மை நிர்வாகி மோகன், மாசுக் கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior