
தமிழகத்தில் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் அங்கீகாரம் பெற்றுள்ள 10 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு இந்த ஆண்டு மொத்தம் 767 எம்.பி.பி.எஸ். இடங்களை அளிக்க உள்ளன.
சிறுபான்மை அந்தஸ்து அல்லாத கல்லூரியாக இருந்தால், மொத்த இடங்களில் 65 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்களையும், சிறுபான்மை அந்தஸ்து கொண்ட கல்லூரியாக இருந்தால் 50 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்களையும் அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்க ஒப்புக் கொண்டுள்ளன. அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இட விவரம் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக