கடலூர்:
           கடலூர் நகரில் வெள்ளிக்கிழமை (17-ம் தேதி) முதல் பள்ளிகள்  தொடங்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி  தெரிவித்தார்.   
மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:   
              கடலூர் நகரில் ஏற்பட்டு உள்ள போக்குவரத்து நெரிசல், பள்ளிகள் தொடங்கும்  நேரத்தை மாற்றி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில்  நடந்தது. 
 கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், 
              கடலூர் நகரில் போக்குவரத்து  நெரிசலைத் தவிர்ப்பதற்காக, பள்ளிகள் தொடங்கும் நேரம் வெள்ளிக்கிழமை முதல்  மாற்றப்படுகிறது.  செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி ஆகியவை காலை 8-30 மணிக்குத் தொடங்கும். ஏனைய பள்ளிகள் காலை 9-30 மணிக்குத்   தொடங்கும்.   தனியார் ஆட்டோ மற்றும் வேன்களில் பள்ளி மாணவர்களைப் பாதுகாப்புடன் அழைத்துச்  செல்ல வேண்டும். அனுமதிக்கப் பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏற்றிச் செல்லக் கூடாது  என்றார் ஆட்சியர்.   
             ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி, மாவட்டக்  கல்வி அலுவலர் பாரதமணி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன், கூடுதல்  கண்கணிப்பாளர் ராமகிருஷ்ணன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் நடனசபாபதி,  வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர், கடலூர் கோட்டாட்சியர் முருகேசன்,  நகராட்சி ஆணையர் இளங்கோவன், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.


 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக