நடுவீரப்பட்டு : 
              பண்ருட்டியிலிருந்து நடுவீரப்பட்டு வழியாக  நெல்லிக்குப்பம் செல்லும் அரசு பஸ் அடிக்கடி நிறுத்தப்படுவதால் பொதுமக்கள்   அவதியடைந்து வருகின்றனர். 
             பண்ருட்டியிலிருந்து சாத்திப்பட்டு, சி.என்.  பாளையம், நடுவீரப்பட்டு, பாலூர், குச்சிப்பாளையம் வழியாக நெல்லிக்குப்பம்  வரை அரசு பஸ் தடம் எண் 17 இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் காலை 6.30 மணிக்கு  நடுவீரப்பட்டிற்கு வந்து செல்லும். இந்த பஸ்ஸில் நடுவீரப்பட்டு மற்றும்  அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள்,  தனியார் கம்பெனி ஊழியர்கள் என அனைவரும் பாலூர் மற்றும் நெல்லிக்குப்பம்  சென்று அங்கிருந்து வேறு பஸ் பிடித்து சென்று வந்தனர். 
              இந்த பஸ் கடந்த 10  நாட்களாக வராததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இந்த  பஸ்  நெல்லிக்குப்பத்திலிருந்து நடுவீரப்பட்டு வழியாக காலை 7.45க்கு  பண்ருட்டிக்கு சென்று வந்தது. இந்த பஸ்ஸில் தான் சாத்திப்பட்டு,  நெல்லித்தோப்பு, நடுவீரப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த  மாணவ, மாணவிகள் பண்ருட்டியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் சென்று  படித்து வந்தனர். இந்த வழித்தடத்தில் இந்த ஒரு பஸ் தான் காலை நேரத்தில்  உள்ளதால் இந்த பஸ்சை நம்பி இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ,  மாணவிகள் பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் சென்று வந்தனர். 
            இந்த பஸ்  அடிக்கடி முன் அறிவிப்பு இல்லாமல் நிறுத்தப்படுவதால் நேரத்தில் செல்ல  முடியாமல் காலை வேளையில் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஆகையால் இந்த  பஸ்சை தொடர்ந்து இயக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும்.


 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக