உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 06, 2011

அரசியலில் ஈடுபடும் என்.எல்.சி. ஊழியர்கள் மீது நடவடிக்கை: என்.எல்.சி. நிர்வாகம் முடிவு

நெய்வேலி:

              அரசியல் கட்சிகளின் பொறுப்புகளில் உள்ள என்.எல்.சி. ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க என்.எல்.சி. நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  

           என்.எல்.சி. நிறுவனத்தில் ஊழியர்களாக இருக்கும் பலர் அரசியல் கட்சிகளின் மாநிலம், மாவட்டம், ஒன்றியம் மற்றும் நகர பொறுப்புகளில் நிர்வாகிகளாக பதவி வகிக்கின்றனர். இவர்கள் அரசியல் கட்சிகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பல நேரங்களில் வெளியூர் செல்கின்றனர். இதனால் அவர்கள் சரிவர பணிக்கு வர முடியாத சூழல் நேரிடுகிறது.  மேலும் கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடும் நேரத்தில் கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு, பொது நலத்துக்காக போராட்டத்தில் ஈடுபட்டு சிறை செல்லவும் நேரிடுகிறது. 

              அவ்வாறு ஒரு ஊழியர் சிறை செல்ல நேர்ந்தால், அது சட்டப்படி குற்றச்செயல் என்பதால், என்.எல்.சி. விதிமுறைகளின்படி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு நிர்வாகம் தள்ளப்படுகிறது.  ÷இது ஒருபுறம் இருக்கையில் அரசியல் கட்சிகளின் பொறுப்புகளில் உள்ள ஊழியர்கள் தினந்தோறும் பணிக்கு வந்தது போன்று தங்களது வருகையை பதிவுசெய்துவிட்டு, அதன்பின் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.  

            அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது நிறுவனத்தைச் சேர்ந்த பல ஊழியர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களுக்காக வெளியூர்களில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும், அவ்வாறு அவர்கள் தேர்தல் பிரசாத்தில் ஈடுபட்ட நாள்களில் என்.எல்.சி. பணிக்கு வந்தது போன்று, வருகைப் பதிவு செய்து ஊதியம் பெற்றிருப்பதாகவும் இதனால் நிர்வாகத்துக்கு இழப்பு ஏற்படுவதாக மர்மநபர்கள் சிலர் என்.எல்.சி. கண்காணிப்புத் துறைக்கு கடிதம் எழுதியதாகத் தெரிகிறது.  

             இதையடுத்து அவ்வாறு அரசியல் கட்சிகளின் பொறுப்புவகிக்கும் என்.எல்.சி. ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கவும் தயாராகிவுள்ளது என்எல்சி நிர்வாகம்.  

இது குறித்து சம்மந்தப்பட்ட அரசியல் கட்சிகள் பொறுப்பு வகிக்கும் நிறுவன ஊழியர்கள் கூறுகையில், 

             "இது காலங்காலமாக இருந்துவரும் நடைமுறை. நிர்வாகத்திற்கு இப்போதுதான் ஞானோதயம் ஏற்பட்டதா? இதையெல்லாம் சிறிது நாள்களுக்குத்தான். எங்களது ஆதரவு நிர்வாகத்துக்கு தேவை. எனவே பயப்படும் படியாக எதுவும் நடைபெறாது' என்றனர்.  நெய்வேலியில் மிகப்பெரிய அலுவலகத்தைக் கொண்டு, ஒரு ஏ.டி.ஜி.பி. அந்தஸ்தில் ஒரு தலைமை அதிகாரியுடன்,75-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வைத்துக் கொண்டு இயங்கும் என்.எல்.சி. கண்காணிப்புத் துறை, இத்தனை ஆண்டுகள் கண்டும் காணாமல் இருந்துவிட்டு தற்போதுதான் விழித்துக் கொண்டிருக்கிறதோ?






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior