உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 15, 2011

நெய்வேலி மாணவியின் மேற்படிப்பிற்கு உதவுங்கள்

                 பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து, ஜேப்பியார் கல்லூரியில் பயில இடம் கிடைத்தும், கல்லூரிக் கட்டணமே செலுத்த முடியாமல் தவிக்கும் மாணவிக்கு நெய்வேலி அதிமுக தொழிற்சங்கம் சார்பில் ரூ.5 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது. 

               நெய்வேலி என்எல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்றவர் மாணவி ஆர்.அனிதா. பிளஸ் டூ தேர்வில் டிராப்ஃட்ஸ் பிரிவில் 1131 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ம் இடமும், பள்ளி அளவில் முதலிடத்தையும் பிடித்தார். இவரது தந்தை பெயிண்ட் அடிக்கும் வேலைசெய்துவரும் கூலித் தொழிலாளி. இந்நிலையில் மாணவி அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் கலந்துகொண்டு, சென்னை ஜேப்பியார் கல்லூரியில் கட்டுமான பொறியியல் பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.  

             இந்நிலையில் சிறந்த கல்லூரியில் பயிலும் வாய்ப்பைப் பெற்ற மாணவிக்கு கல்லூரியில் ஆண்டுக் கட்டணத்தை செலுத்த போதிய வசதியில்லாமல் தவித்து வருகிறார். இதனிடையே, நெய்வேலி அதிமுக தொழிற்சங்கம் சார்பில் மாணவியின் கல்லூரிப் படிப்புக்கு உதவிடும் வகையில் ரூ.5 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இத்தொகையை நெய்வேலி எம்எல்ஏ எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியனும், குறிஞ்சிப்பாடி எம்எல்ஏ சொரத்தூர் ராஜேந்திரனும் மாணவியிடம் வழங்கினர்.

             கொடையுள்ளம் கொண்ட எவரேனும் உதவிட முன்வருவார்களேயானால் ஏழை மாணவியின் எதிர்காலம் பிரகாசிக்க வாய்ப்புண்டு. 

மாணவியின் விவரத்தை அறிய விரும்புவோர் மாணவி பயின்ற என்எல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை அணுகலாம். 


தொடர்புக்கு:


04142-255972.









0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior