கடலூர்:
பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கான பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி, 17-7-2011 அன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு குறிஞ்சிப்பாடி பத்மாவதி திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று முன்னாள் அமைச்சரும் மாவட்ட தி.மு.க. செயலருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவரிடையே தமிழ் பற்றை ஊக்குவிக்கும் வகையில், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முரசொலி அறக்கட்டளை சார்பில், கடலூர் மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி இப்போட்டியை நடத்துகிறது. குறிஞ்சிப்பாடி பத்மாவதி திருமண மண்டபத்தில் 17-ம் தேதி காலை 10 மணிக்கு போட்டிகள் நடைபெறும்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்குத் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், 2-வது பரிசு ரூ. 3 ஆயிரம், 3-வது பரிசு ரூ. 2 ஆயிரம், ஆறுதல் பரிசு 5 பேருக்கு தலா ரூ. 1,500 வழங்கப்படும். போட்டிக்கு, உரிய கடிதம் மற்றும் ஒப்பிக்க வேண்டிய பாடல் வரிகள், மாவட்டத்தில் உள்ள அனைத்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக