உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 15, 2011

கடலூர் மாவட்ட முந்திரி விவசாயிகள் கவனத்துக்கு


கடலூர்:

         முந்திரி மரங்கள் பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டது. இந்தியா, வியத்நாம், நைஜீரியா, பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. 

            தமிழ்நாட்டில் கடலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், மாவட்டகளில் முந்திரி மரங்கள் அதிகம் பயிடப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பண்ருட்டி வட்டத்தில் மட்டும் 50 ஆயிரம் ஏக்கரில் முந்திரி மரங்கள் உள்ளன. பண்ருட்டிப் பகுதியில் உற்பத்தியாகும் முந்திரிக் கொட்டைகள் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்தும் முந்திரிக் கொட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு, உடைத்து பதப்படுத்தியும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

             எனவே கடலூர் மாவட்டத்தில் முந்திரி விவசாயம் தனித் தன்மை வாய்ந்ததாகக் கருதப் படுகிறது. முந்திரி மரங்கள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையின் போது, இடை உழவு செய்வதன் மூலம், மழைநீரை உள்ளிழுத்து மண்ணின் ஈரப்பதத்தை நீண்ட நாள் பாதுகாக்கிறது. இதனால் முந்திரி மகசூல் திறன் அதிகரிக்கிறது என்றும் வேளாண் துறை அறிவிக்கிறது. முந்திரித் தோப்புகளுக்குள் ஆங்காங்கே காணப்படும் காட்டுச்செடிகள், முள்புதர்களை நீக்குவதன் மூலம், முந்திரி மரங்களுக்கு அளிக்கப்படும் சத்தி மற்றும் நீர் தேவை, போட்டியின்றி முந்திரி மரங்களுக்கு மட்டுமே கிடைக்கும். 

               முந்திரி மரத்தின் அடியில் விழுந்து கிடக்கும், காய்ந்த சருகுகளை நன்றாகக் கொத்தி, மண்ணோடு மண்ணாக ஆக்கி, மரங்களைச் சுத்தமாகப் பராமரிப்பதன் முலம் முக்கிய உரச்சத்து முந்திரி மரங்களுக்குக் கிடைப்பதோடு, பூச்சி, பூஞ்சாணம் தாக்குதலும் குறையும். முந்திரி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வருகிற வடகிழக்குப் பருவ மழையினை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில், முந்திரியில் இடைஉழவு செய்வதுடன் ஆங்காங்கே உள்ள புதர்களையும் நீக்குமாறு, வேளாண்துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. 

               மேலும் மரங்களின் ஆழப்பகுதியில் இருந்து, ஒரு மீட்டர் தள்ளி, ஒரு அடி ஆழம் அகலம் குழியெடுத்து, அதில் பரிந்துரைக்கப்பட்ட 50 கிராம் தொழு உரம், ஏக்கருக்கு 500 கிராம் தழைச் சத்து, 200 கிராம் மணிச் சத்து, 300 கிராம் சாம்பல் சத்து, ஆகியவற்றை இட்டு மூடிவிடவும். இதனால் மகசூலை அதிகரிக்க முடியும் என்றும் வேளாண் துறை ஆலோசனை தெரிவித்து உள்ளது.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior