கடலூர்:
          தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெறத் தகுதியான கடலூர் மாவட்டப்  பெண்கள், விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர்  கோ.திருமுகம் அறிவித்து உள்ளார்.
கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர்  வெளியிட்ட  செய்திக் குறிப்பு: 
             வீர தீரச் செயல்கள் புரியும் மகளிருக்கு, ஆண்டுதோறும்  தமிழக அரசு கல்பனா சாவ்லா விருது வழங்கி கௌரவித்து வருகிறது.தனது  உயிரையும் பொருள்படுத்தாமல், மற்றவர்களின் உயிர் பாதுகாப்புக்காகவும்,  சாகசச் செயல்களை புரிந்ததற்காகவும், வீரதீரச் செயல்களை புரிந்த மகளிரைக்  கெüரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில், தமிழக அரசால்  இந்த விருது வழங்கப்படுகிறது.
          இந்த ஆண்டு இவ்விருதை வழங்க, உரிய கருத்துருவை 8-7-2011-க்குள் வழங்க வேண்டும். இவ்விருதுக்கு  விண்ணப்பிக்கத் தகுதியான, கடலூர் மாவட்டத்தைத் சேர்ந்த பெண்கள், மேலும்  விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை அணுகலாம் என்றும், செய்திக்  குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக