விருத்தாசலம் : 
            விருத்தாசலம் அய்யனார்கோவில் தெருவில் ரசாயன கலவையின்றி  மண்ணாலான விநாயகர் சிலைகள் செய்யும் பணி நடந்து வருகிறது. வரும் செப்டம்பர்  1ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்று புதிய  விநாயகர் சிலைகளை வைத்து, பக்தர்கள் பூஜை செய்து, பின்னர் பிரதிஷ்டை  செய்யப்பட்டு மூன்றாம் நாள் கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.  இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பண்ருட்டி, விருத்தாசலம்  உட்பட பல இடங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி நடந்து வருகிறது.
          விருத்தாசலம் அய்யனார் கோவில் தெருவில் ரசாயன கலவையின்றி மண்ணாலான  விநாயகர் சிலை செய்யும் பணி நடந்து வருகிறது. சிலைகளை கரைக்கும் போது  தண்ணீர் மற்றும் மண் மாசுபடாமல் இருக்கும் வகையில் ரசாயன கலவையின்றி,  சிலைகளுக்கு பெயிண்ட்டிற்கு பதில் சுண்ணாம்பு மூலம் வர்ணம் பூசப்படுகிறது.  இச்சிலைகளை கடலில் கரைப்பதால் சுற்றுச் சூழல் பாதிப்பு தடுக்கப்படுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக