உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், ஜூலை 25, 2011

தீபாவளிப் பண்டிகை : ரயில் முன்பதிவு முடிந்தது

                 தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் 90 நாள்களுக்கு மேல் உள்ள நிலையில் ரயில்களில் இப்போதே டிக்கெட்டுகள் அனைத்தும் முடிந்துவிட்டன. 

                இ-டிக்கெட் மூலம் முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதில் தெற்கு ரயில்வே அதிக கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  நாடு முழுவதும் அக்டோபர் 26-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரயில்களில் பயணம் செய்ய 90 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. அதன்படி தீபாவளியைக் கொண்டாட அக்டோபர் 21-ம் தேதி புறப்பட திட்டமிடுபவர்கள் சனிக்கிழமை முன்பதிவு செய்யத் தொடங்கினர். 

                இதற்கு முன் ஏற்பாடாக ரயில்வே துறையும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்திருந்தது.  ரயில்வே முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் கவுன்டர்களில் ரயில்வே பாதுகாப்புப்படை, கமாண்டோ படையினர் கொண்ட 15 குழுக்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தன. புரோக்கர்களை கட்டுப்படுத்த கேமரா மூலம் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. எழும்பூர், சென்ட்ரல், மாம்பலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவு டிக்கெட் கவுன்டர்களில் உள்ள விசாரணை கவுன்டர்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

                சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை இயங்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்துக்குள் அனைத்து வகுப்புகளிலும் முன்பதிவு முடிந்தன. மாலை 4 மணிக்குள் அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவுகள் முடிந்துவிட்டன.  இது குறித்து டிக்கெட் கவுன்டர்களில் உள்ள அதிகாரிகள் கூறியது:  தீபாவளியையொட்டி வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சனிக்கிழமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

                     ஆனால் கவுன்டர்களில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை. ஆனாலும் அனைத்து ரயில்களிலும் எல்லா வகுப்புகளுக்கும் டிக்கெட்டுகள் முன்பதிவாகிவிட்டன. இ-டிக்கெட் மூலம் அதிக அளவில் முன்பதிவு செய்ததே இதற்கு காரணம். ஞாயிறு, திங்கள்கிழமைகளில் அதிக அளவில் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றனர்.  இந்த நிலையில் இ-டிக்கெட் மூலம் அதிக அளவில் முன்பதிவுகள் செய்யப்பட்டிருப்பதால், புரோக்கர்கள்தான் அதிக அளவில் இ-டிக்கெட் மூலம் முன்பதிவு செய்திருப்பார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

               எனவே ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் இ-டிக்கெட் மூலம் முன்பதிவு செய்பவர்களை தீவிரமாக கண்காணிக்க தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் சிறப்பு ரயில்களை அதிக அளவில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

 தீபாவளி: அக்டோபர் 22-ம் தேதிக்கு ரயில்களில் டிக்கெட் முடிந்தது


               தீபாவளிக்கு அக்டோபர் 22-ம் தேதி வெளியூர் செல்வதற்காக ரயில்களில் இப்போதே டிக்கெட்டுகள் அனைத்தும் முடிந்துவிட்டன.  வரும் அக்டோபர் 26-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. 90 நாள்களுக்கு முன்பு ரயில்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற நிலை உள்ளது.  இதனால் அக்டோபர் 21-ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களிலும் சனிக்கிழமை டிக்கெட்டுகள் முன்பதிவாகிவிட்டன.  

                இதேபோல் அக்டோபர் 22-ம் தேதி புறப்படும் அனைத்து ரயில்களிலும் ஞாயிற்றுக்கிழமை முன்பதிவு முடிந்துவிட்டன. பெரும்பாலான டிக்கெட்டுகள் www.irctc.co.in. , www.cleartrip.com ஆகிய இணையதளங்கள் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.  இந்த நிலையில் அக்டோபர் 23, 24, 25-ம் தேதிகளில் வெளியூர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும்.  

                எனவே இந்த நாள்களில் வெளியூர் செல்பவர்கள் திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் அதிக அளவில் டிக்கெட் முன்பதிவு செய்ய முற்படுவார்கள்.  அதேபோல் அக்டோபர் 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் திரும்பும் பயணத்துக்கு வரும் வெள்ளி (ஜூலை 29), சனி (ஜூலை 30), ஞாயிறு (ஜூலை 31), திங்கள்கிழமைகளில் (ஆகஸ்ட் 1) அதிக அளவில் டிக்கெட் எடுக்க முற்படுவார்கள்.  இணையதளம் வாயிலாக புரோக்கர்களே அதிக அளவில் டிக்கெட் முன்பதிவு செய்வதாக பலமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

              எனவே குறிப்பிட்ட இந்த நாள்களில் இணைய தளம் வாயிலாக முன்பதிவு செய்யும் நேரத்தை காலை 8 மணி முதல் என்பதை மாற்றி அமைக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் முன்பதிவு டிக்கெட் கவுன்டர்களிலும் கடந்த 2 நாள்களாக கொடுக்கப்பட்ட பாதுகாப்பை விட கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து பயணிகளின் நலனை ரயில்வே துறை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior