உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 25, 2011

கடலூர் மாவட்டத்தில் பட்டாமாறுதல் பெற விரும்புபவர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம்

கடலூர்:

          தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் முறையில் புதிய முறையினை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதன்படி இதுவரையில் பட்டாமாறுதல் தொடர்பாக கடந்த காலத்தில் தாசில்தார் அலுவலகத்தை அணுகி அவர்களிடம் மனு அளிப்பது வழக்கம். அதனை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

         இம்முறையில் பொதுமக்களுக்கு வீண் அலச்சலுடன், பணம், மற்றும் நேரம் வீணாகி வந்தது. மேலும் இம்முறையின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதில் காலதாமதம் ஆகி வந்ததால். இதனை தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா மாற்றி அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி பட்டாமாறுதல் தொடர்பாக ஏதேனும் மனு அளிக்க விரும்புபவர்கள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் (வி.ஏ.ஓ.) நேரடியாக மனு அளிக்கலாம் என்றும், அதனை தொடர்ந்து மனுவின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், பொதுமக்களின் அலைச்சலுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படாது என அறிவித்திருந்தார். இதன்அடிப்படையில் இம்முறையானது கடலூர் மாவட்டத்தில் இன்று  முதல் அமலுக்கு வருகிறது.
 
இதுதொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:-

           கடலூர் மாவட்டத்தில் பட்டாமாறுதல் பெற விரும்புபவர்கள் அந்தந்த கிராம நிர்வாக அதிகாரிகளிடம் இன்று முதல் (திங்கள்கிழமை) முதல் வாரத்தில் திங்கள்கிழமை தோறும் மனு அளிக்கலாம். இதில் கிராம நிர்வாக அதிகாரிகள் இல்லாத கிராமத்தினர் கிராம நிர்வாக அதிகாரி பொறுப்பாளரிடம் செவ்வாய் கிழமை தோறும் மனு அளிக்கலாம். இவ்வாறு பெறப்படும் மனுவிற்கு ஆதரமாக மனுதாரர்களுக்கு ஒரு ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். உட்பிரிவு செய்ய அவசியம் இல்லாத இனங்களில் 15 நாட்களுக்குள்ளாகவும், உட்பிரிவு செய்ய வேண்டிய இனங்களில் 30 நாட்களுக்குள்ளாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

           மேலும் மனு அளிப்பவர்கள் உட்பிரிவு கட்டணம் ஏதும் கட்டுவதற்கு தேவையில்லை. பட்டா பெறும்போது உரிய கட்டணத்தை செலுத்தினால் போதுமானதாகும். மேலும் அன்றை தினத்தில் நிலத்தின் பத்திரத்தை நகல் (ஜெராக்ஸ்) எடுத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior